‘நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது?’

ஆர் எஸ் பாரதி
ஆர் எஸ் பாரதி
Published on

“நான் படித்தபோது பி.ஏ. படித்தாலே போர்டு எழுதி வைத்துக் கொள்வார்கள். ஆனால், இப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது.” என திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தற்போது நாய் கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது என்று பேசியது சர்ச்சையாகியுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஆர். எஸ். பாரதி பேசியதாவது:

“கம்யூனல் ஜி.ஓ.வால்தான் பலர் மருத்துவராக முடிந்தது. இதைப் பலபேர் மறந்துவிட்டார்கள். ஏதோ குலப் பெருமையால், கோத்தரப் பெருமையால் மருத்துவர், வழக்கறிஞர் ஆகிவிட்டோம் என நினைக்கிறார்கள். இது எங்கள் இயக்கம் போட்ட பிச்சை.

திராவிட இயக்கம், கம்யூனல் ஜிஓ இல்லையென்றால் இத்தனை டாக்டர் போர்டு தொங்காது. நான் பட்டம் பெற்றபோது பி.ஏ. பட்டம் பெற்றால் உடனே போர்டு எழுதி மாட்டிக் கொள்வார்கள். காரணம், அப்போது ஊரில் ஓரே ஒரு பி.ஏ. பட்டம் பெற்றவர்தான் இருப்பார். ஆனால், இப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இப்போது யார் வீட்டிலாவது பி.இ. பட்டம் போர்டு தொங்குகிறதா? இந்த வளர்ச்சிக்கு யார் காரணம்? அதை அழிப்பதற்குத்தான் நீட் வந்துள்ளது.” என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com