10 செ.மீ. மழைக்கே பல்லிளிக்கும் சென்னை சாலைகள், உயிர்ப்பலி- எடப்பாடி தாக்கு!

Edappadi palanisami
எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை, அசோக் நகரில் மழைநீர்க் கால்வாயில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் விழுந்து மரணமடைந்தார்.

அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சாலைகளின் நிலை மோசமாக இருப்பதைப் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.

”குண்டும் குழியுமான சாலைகள், நிரம்பி வழியும் கழிவு நீர் குழாய்கள், குடிநீர் குழாய்களில் கலக்கும் கழிவு நீர், நேற்று முன்தினம் பெய்த 10 செ.மீ. மழைக்கே பல் இளிக்கும் மழைநீர் வடிகால் அமைப்பு, வெள்ள நீரால் நிரம்பி வழிந்த சாலைகள், மழை நீரால் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ள பல மாநகராட்சி பூங்காக்கள் என அவல நிலையில் வைத்திருக்கும் திரு. ஸ்டாலினின் திமுக அரசின் சென்னை மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடே இத்துயரச் சம்பவத்திற்கு காரணம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

”இம்மரணத்திற்கு தமிழக மக்கள் மீது சிறிதும் அக்கறையில்லாத, குடும்ப நலனையே பிரதானமாக கொண்ட முதலமைச்சர்தான் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்."என்றவர்,

“இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இனி இதுபோன்ற நிகழ்வு எங்கும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றும் வலியுறுத்தியுள்ளார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com