விலக்கு கேட்டு எடப்பாடி பழனிசாமி மனு!

Edapadi Palanisamy
எடப்பாடி பழனிசாமி
Published on

தயாநிதி மாறன் தொடுத்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். 

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மைய சென்னை எம்.பி. தி.மு.க.வின் தயாநிதி மாறன் கடந்த பதவிக்காலத்தில்தன்தொகுதி நிதியை 75 சதவீதம் செலவிடவே இல்லை என பழனிசாமி பேசியிருந்தார். அதை மறுத்த தயாநிதி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 

அதில், பழனிசாமி இன்று நீதிமன்றத்தில் நேரில் முன்னிலை ஆனார். 

அப்போது, தனக்கு 70 வயது ஆகிவிட்டது என்றும் முன்னாள் முதலமைச்சர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஆன தான் நீதித்துறையை மதிப்பவன் என்றும் தொடர்ந்து மருந்துகளை உட்கொண்டுவருவதாகவும் அதனால் விசாரணைக்கு நேரில் முன்னிலையாவதில் தனக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்றும் அவர் மனு அளித்தார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com