வரக்கூடிய காலத்தில் ஏற்படக்கூடிய புயல்கள் முன்னைவிட வலுவானவையாக இருக்கும் என்று மத்திய புவி அறிவியல் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துறையின் செயலாளர் இரவிச்சந்திரன் இதைத் தெரிவித்தார்.
”பருவநிலை தப்புதலால் கடலில் வெப்ப அலைகள் அதிகரிப்பு பல மாதங்களாக நீடித்துவருகிறது. இதன் காரணமாக இனி வரக்கூடிய புயல்கள் முன்னைவிட வலுவானவையாக இருக்கும்.” என்று அவர் கூறினார்.
"கடல் வெப்ப அலைகள் இருக்கும் இடத்தின் வழியாக புயல் கடந்துபோகும்போது, அதிகமான நீரை இழுத்துக்கொண்டு தீவிரத்தன்மை கூடும். அதை முன்கூட்டியே அறிந்து கூறுவது கடினமாக இருக்கும். புயல் தீவிரமாவதை முன்னறிவிப்பு கஷ்டமாகும். இப்படியான கடல் வெப்ப அலையான இடங்களில் மீன்வளம் அழியும். பவளப் பாறைகள் இருந்தால், அவை முழுக்க உயிரற்றுப்போகும். மீண்டும் அந்த இடத்தில் அதைப் புதுப்பிப்பது அதிக ஆண்டுகள் ஆகும். இதைத் தடுப்பதற்குதான் வழியைப் பார்க்கமுடியும். அப்படியே அமிழ்த்திவிட முடியாது.” என்றும் இரவிச்சந்திரன் கூறினார்.