தன்னுடைய கொள்ளுப் பேரக்குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்காத பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை இணைய ஊகத்தினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நேற்று தமிழ்நாடு நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அடுத்த சில மணி நேரத்தில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பேரக்குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில், “எனது கொள்ளுப் பெயரக் குழந்தைகள் நேயா டீனா சுகந்தன், அரூத் ஐஸ்வர்யா முகுந்தன், மிளிர் சம்யுக்தா பிரித்தீவன், அகிரா சம்யுக்தா பிரித்தீவன், இகம் சங்கமித்ரா சங்கர் பாலாஜி , அகவ் சமித்ரா நிதர்சன் ஆகியோருடன் நேற்று தைலாபுரம் இல்லத்தில் ஒரு மகிழ்ச்சியான பொழுதில்.” என்று பதிவிட்டு இருந்தார். இதைப் பார்த்த பலரும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று பேசும் ராமதாஸ் தன்னுடைய கொள்ளுப் பேரக்குழந்தைகளுக்கு ஏன் தமிழில் பெயர் வைக்கவில்லை என கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
அவற்றில் சில...
மருத்துவர் மணிவண்ணன்
தமிழ் காப்போம் என்ற அய்யாவின் வீட்டுலயே அய்யா பேச்ச யாரும் கேக்கலயே
வெண்புறா சரவணன்
தமிழ்க் குடிதாங்கி... அந்நிய மொழியின் இடிதாங்கி! அரசியல் நடி(ப்பு)தாங்கி!
பதிப்பாளர் கருப்பு நீலகண்டன்
தூய தமிழ்ப்பெயர்களா வைச்சுருக்கீங்களே டாக்டரய்யா ,
எவ்லாம் அண்ணன் திருமாவளவனோடு சேர்ந்து திமுகவிற்கு எதிராக தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் நடத்துனீங்களே அப்பப் பொறந்தக் கொழந்தைகளா?
சித்த மருத்துவர் சித்தர் திருத்தணிகாசலம்
ஒரு குழந்தைக்காவது ஐயாவின் கொள்கை சார்ந்து தமிழில் பெயர் வைத்திருக்கலாம் . மருத்துவர் ஐயா மகிழ்ச்சி அடைந்திருப்பார்
அடுத்து பிறக்கப்போகும் குழந்தைகளுக்காவது மருத்துவர் ஐயாவை பெயர் வைக்கக்கூறி தமிழில் பெயர் வைக்கவேண்டும்
ஐயா இன்னும் மகிழ்ந்திருப்பார். ”
என்று இதுபோல் பலரும் கருத்துக் கூறியுள்ளனர்.