விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டைசென்னை ஐ.ஐ.டி. கொண்டு வந்திருக்கிறது.
இதுவரையில் இந்தியாவில் உள்ள எந்த ஐ.ஐ.டி.களும் விளையாட்டுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தாத நிலையில், சென்னை ஐ.ஐ.டி. அறிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டிலிருந்து ஒவ்வொரு துறையிலும் தலா 2 இடங்களை ஸ்போர்ட்ஸ் கோட்டாவுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டியின் இந்த புதிய முயற்சி உண்மையிலேயே வரவேற்கத் தகுந்தது. இந்த ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்கள் ஜே ஈ ஈ தேர்வில் தகுதி பெற்றிருந்தால் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவர்.
ஆனால் ஒரு பக்கம் வரவேற்பு இருந்தாலும் மறுபுறம் விமர்சனங்கள் எழாமல் இல்லை.
தமிழக அரசின் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஸ்போர்ஸ் கோட்டாவில் 53 விளையாட்டுகள் இடம்பெற்றிருக்க, ஐ.ஐ.டி. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் 13 விளையாட்டுகள் மட்டுமே உள்ளன. கபடி, சிலம்பம் போன்ற மற்ற விளையாட்டுகளில் சாதனை செய்தவர்களுக்கும் இதில் ஐஐடி இட மளித்திருக்கலாமே.. எலைட் நிறுவனம், எலைட்டான விளையாட்டுகளை மட்டுமே கண்டுகொள்ளுமா? என்று கேட்கப்படுகிறது.
சென்னை ஐ.ஐ.டி.யிலும் அண்ணா பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றுள்ள விளையாட்டுகளின் பட்டியல் பின்வருமாறு:
சென்னை ஐ.ஐ.டி.
1. நீச்சல்
2. தடகளம்
3. செஸ்
4. கிரிக்கெட்
5. பேட்மின்டன்
6. கூடைப்பந்தாட்டம்
7. கால்பந்தாட்டம்
8. ஹாக்கி
9. ஸ்குவாஷ்
10. டேபிள் டென்னிஸ்
11.டென்னிஸ்
12. வாலிபால்
13. பளு தூக்குதல்
அண்ணா பல்கலைக்கழகம்
1. மல்லர் கம்பம்
2. சேய்லிங்
3. ரக்பி
4. துப்பாக்கிச் சுடுதல்
5. செபாக் டக்ரா
6. சிலம்பம்
7. மோட்டார் ஸ்போர்ட்ஸ்
8. கூடைப்பந்து
9. பவர் லிஃப்டிங்
10. ரோலர் ஸ்கேட்டீங்
11. ரோவிங்
12. சாப்ட் பால்
13. சாப்ட் டென்னிஸ்
14. ஸ்க்வாஸ் ராக்கெட்
15. நீச்சல்
16. டேபிள் டென்னிஸ்
17. டைக்குவாண்டோ
18. டென்னிகாய்ட்
19. த்ரோபால்
20. டிரையத்லான்
21. வாலிபால்
22. பளு தூக்குதல்
23. மல்யுத்தம்
24. வுஷூ (Wushu)
25. படகு ஓட்டுதல்
26. வில்வித்தை
27. தடகளம்
28. பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர்
29. பாடி பில்டிங்
30. குத்துச்சண்டை
31. கேரம்
32. அத்யா பத்யா
33. பேட்மிட்டன்
34. பால் மிட்டன்
35. பேஸ்பால்
36. கூடைப்பந்து
37. செஸ்
38. கிரிக்கெட்
39. சைக்கிள் போலோ
40. சைக்கிள் ஓட்டுதல்
41. கால்பந்தாட்டம்
42. ஃபென்சிங்
43. கோல்ஃப்
44. ஜிம்னாஸ்டிக்ஸ்
45. ஹேண்ட் பால்
46. ஹாக்கி
47. ஜூடோ
48. கபடி
49. கராத்தே
50. கோ கோ
51. கோர்ஃப் பால்
52. யோகாசனம்
53. பீச் வாலிபால்