செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை
செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை

தி.மு.க.வின் வெற்றி நிரந்தரம் இல்லை! – அண்ணாமலை பேட்டி

Published on

மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி நிரந்தரம் இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை பா.ஜ.க. மாநிலத் தலைமை அலுவலகத்தில் இன்று மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:

“மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி நிரந்தரம் இல்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும்.

ஈரோடு இடைத்தேர்தல் போன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இருக்கக் கூடாது. எங்கள் கூட்டணி சார்பில் பா.ம.க. போட்டியிடுகிறது. நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம். நாளை பா.ஜ.க.வின் தேர்தல் பணிக்குழுவை அறிவிக்க உள்ளோம். தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்.

தமிழிசை செளாந்தரராஜன் கட்சியின் மூத்த தலைவர். அவரின் விருப்பத்தின்படியே தேர்தலில் போட்டியிட்டார். அவரிடம் அமித்ஷா பேசியது பாசம்தான். எங்களிடம் பேசினாலும் அமித்ஷா அப்படித்தான் பேசுவார். எங்கேயும் கண்டிக்க மாட்டார். அமித்ஷாவின் அந்தப் பேச்சு அன்பும் அரவணைப்பும் கொண்டது. இதில் வேறு ஒன்றும் இல்லை.” என்று அண்ணாமலை கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com