மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. 5 தொகுதிகளில் போட்டியிடும் என இன்று காலையில் எடப்பாடி பழனிசாமிதெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, மாலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதல் முறையாக அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு இன்று சென்றார். இரு கட்சிகளின் தலைவர்களும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
அதன்படி, மைய சென்னை, திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது.
முன்னதாக, காலையில் ஏற்பட்ட உடன்பாட்டில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு திண்டுக்கல்லும் ஒதுக்கப்பட்டன.
இதனிடையே, பா.ஜ.க. மாநிலத் தலைமையகத்துக்குச் சென்று த.மா.கா. தலைவர் வாசனும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பா.ஜ.க.வுடனான அவர்களின் பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை.
மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் என வாசன் தெரிவித்தார்.
நாளை நல்ல முடிவு காணப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.