தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் செல்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என கலந்து கொள்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் பசும்பொன் செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் மதுரை செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் செல்கிறார்.
அக்டோபர் 30ஆம் தேதி கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ளார்.