செந்தில்பாலாஜி வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Published on

செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் தலைமை நீதிபதி அமர்வுக்கு வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் 13-ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது கைது சட்டவிரோதமானது என கூறி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் நிஷா , பரத சக்கரவர்த்தி ஆகியோர் வழக்கை விசாரித்துவந்தனர்.

இந்நிலையில் இன்று ( செவ்வாய்க்கிழமை) வழக்கில் தீர்ப்பு வெளியானது. நீதிபதி நிஷா, கைது நடவடிக்கை சட்டவிரோதமானது எனவே அவரை விடுவிக்கலாம் என்று தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

மாறுபட்ட தீர்ப்பு வந்த நிலையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com