கோவை: புதிய தகவல் தொழில் நுட்ப கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர்!

கோவை: புதிய தகவல் தொழில் நுட்ப கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர்!
Published on

கோவை விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? அரசின் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கின்றனவா? என்பதை மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொள்ள போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி தனது முதல் கள ஆய்வினை, மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கினார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு அவருக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர் அங்கிருந்து காரில் விளாங்குறிச்சிக்கு சென்றார். அங்குள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் எல்காட் நிறுவனம் சார்பில் 3.94 ஏக்கர் பரப்பளவில், ரூ.114.16 கோடியில் 8 தளங்களுடன் புதிதாக தகவல் தொழில்நுட்ப கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம், கோவை தொகுதி எம்.பி. கணபதி ராஜ்குமார், கலெக்டர் கிராந்திகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, அரசு விருந்தினா் மாளிகைக்கு வரும் முதல்வா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தங்க நகை தொழில் அமைப்பு நிா்வாகிகளுடன் மாலை 4 மணிக்கு கலந்துரையாடுகிறாா். மேலும், தமிழக வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களின் பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்குகிறார்.

இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை 9.30 மணிக்கு காந்திபுரத்தில் ரூ.133.21 கோடியில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்கிறாா். தொடா்ந்து கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் பொது நூலகத் துறை சாா்பில் ரூ.300 கோடியில் 7 தளங்களுடன் அமைக்கப்படவுள்ள நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கு காலை 9.45 மணிக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கோவை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மண்டலத்தைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினா், மோப்ப நாய் பிரிவினா் உள்ளிட்ட சிறப்பு படைப் பிரிவினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com