பட்டாசுத் தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

CM Stalin interacts with fire works worker
பட்டாசுத் தொழிலாளரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் விசாரித்தார்
Published on

விருதுநகர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் இரண்டு நாள்கள் களஆய்வுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.

முன்னதாக, மதுரை விமானநிலையத்திலிருந்து சாலை வழியாகச் சென்ற அவருக்கு இரு பக்கங்களிலும் ஆங்காங்கே பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

விருதுநகர் மாவட்டத்தில் முதல் நாளான இன்று விருதுநகர், கன்னிசேரி புதூர், மதன் பட்டாசு ஆலையை அவர் பார்வையிட்டார். அங்குள்ள பெண் தொழிலாளிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். 

மொத்தம் 80 பேர் பணியாற்றும் அந்த ஆலையில் 36 பெண்கள் பணியாற்றும்நிலையில், மகளிர் உரிமைத் தொகை பற்றியும்  தொழிற்சாலைப் பாதுகாப்பு குறித்தும் அவர்களிடம் கேட்டார்.  

பின்னர், விருதுநகர் சூலக்கரையில் 35 மாணவிகள் தங்கிப் படிக்கும் அரசு குழந்தைகள் காப்பகத்தையும் அவர் பார்வையிட்டார். அங்குள்ள குழந்தைகளுக்கு அருகில் உள்ள பேக்கரி பொருட்கள், பழங்களையும் வாங்கிச்சென்று முதலமைச்சர் வழங்கினார். அந்த மாணவிகளுடன் பேசி, அறிவுரையும் வழங்கினார். 

தொடர்ந்து, பயணத்தில் உடனிருந்த அமைச்சர்கள் சாத்தூர் இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கணேசன், ராஜா ஆகியோருடன் ஆலோசனையும் நடத்தினார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com