உச்சநீதிமன்றம் சொன்னபிறகே புயல் நிவாரணம்- மு.க.ஸ்டாலின் அதிருப்தி!

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்
Published on

புயல் வெள்ள நிவாரணங்களுக்காக கோரிக்கைவிடுத்தும் தராத மைய அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட பிறகு 276 கோடி ரூபாயை மட்டும் அறிவித்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவு:

“மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது,

2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!” என்று முதலமைச்சரின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com