ஈரான் சென்று மீன் பிடித்த 28 இடிந்தகரை மீனவர்கள் கைது- முதல்வர் கடிதம்!

tamilnadu fishermen
தமிழக மீனவர்கள்
Published on

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டிற்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். வழக்கம்போல அவர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்தநிலையில், அங்கு எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கடந்த 11ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலை குறித்து ஊர்க்காரர்கள் மூலமாக அரசுக்குத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

“பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரின் இந்த கைது நடவடிக்கையின் காரணமாக, மீனவர்களது வருமானத்தை மட்டுமே நம்பியுள்ள அவர்களது குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com