”அமெரிக்காவுக்கு லேட்டா வந்தாலும் வரவேற்பு லேட்டஸ்ட்டாக” இருக்கிறது என சிகாகோ தமிழ் சங்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ் சங்க கலை விழாவில் கலந்து கொண்டார். பட்டு வேட்டி சட்டையில் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில் அவர் பேசியதாவது:
“அமெரிக்க வாழ் தமிழர்களின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது. தமிழகத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எப்படி இருக்குமோ அதைப்போல அல்ல அதை விட மிக சிறப்பாக இந்த நிகழ்ச்சி உள்ளது. அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்க கூடிய உணர்வை தருகிறது.
நான் முதலமைச்சர் ஆன பிறகு தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று, இப்போது லேட்டாக அமெரிக்காவுக்கு வந்திருக்கிறேன். லேட்டா வந்தாலும் வரவேற்பு லேட்டஸ்ட்டாக இருக்கிறது." இவ்வாறு அவர் கூறினார்.