முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சாதிவாரி கணக்கெடுப்பு: தீர்மானம் கொண்டுவந்த முதல்வர்!

Published on

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.

நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நேற்று முன்தினம் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, “தமிழகத்தில் உடனே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”இப்போது நீங்கள் கூட்டணியில் உள்ள மத்திய அரசோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி, அதற்கு பிறகுதான் இதை அமல்படுத்த முடியும்.

ஏற்கெனவே பீகார் மாநிலத்தில் இதுபோன்று எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பை ரத்துசெய்துவிட்டது.

இந்த பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்று சொன்னால், சாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மத்திய அரசால் விரைந்து எடுக்கப்பட்ட வேண்டும்.

அதற்காக இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரலாம் என்று நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். அதற்கு ஜி.கே.மணி ஆதரவு தரவேண்டும்.” என்றார்.

அதன்படி, இன்று சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி தனி தீர்மானம் தாக்கல் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

“மத்திய அரசுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். புள்ளிவிவர சட்டம் 2008-ன்படி சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம். இந்த சட்டத்தின்படி  மாநில அரசுகள் சமூக, பொருளாதார புள்ளி விவரங்களை சேகரிக்க வழிவகை செய்கிறதே தவிர, இனங்கள் தொடர்பான புள்ளி விவரத்தை சேகரிக்க முடியாது. மக்கள்

மத்திய அரசுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தொகை கணக்கெடுப்பு சட்டம் தெளிவுபடுத்துகிறது. மேலும் இப்பொருள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

சட்டப்படியாக நிலைக்கக்கூடிய கணக்கெடுப்பு என்றால் அதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும். அதனால் இதை நாங்கள் வலியுறுத்துகிறோம். 

2021ஆம் ஆண்டு நடத்தியிருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை கொரோனாவை காரணம் காட்டி இதுநாள் வர மத்திய அரசு செய்யவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும். இது தொடர்பாக  பிரதமருக்கு முன்னரே கடிதம் எழுதியுள்ளேன். 

மாநில அரசுகள் புள்ளிவிவரத்தைச் சேகரித்து அதனடிப்படையில் சட்டத்தை இயற்றினால், அதை நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்துவிடும்.” என்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொண்டு வரும் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தீர்மானம்:

1. மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம் வேலைவாய்ப்பில், சம உரிமை, சம வாய்ப்பு கிடைப்பதில் திட்டங்கள் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என இப்பேரவை கருதுகிறது.

2. நடத்தாமல் இருக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும். 

logo
Andhimazhai
www.andhimazhai.com