தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயினில் இருந்தவாறே ஆலோசனை நடத்தினார்.
ஆளுநர் ஆா்.என்.ரவியின் உரையுடன், தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் வரும் 12-ஆம் தேதி தொடங்கவுள்ளது. வரும் 19-ஆம் தேதி அடுத்த நிதியாண்டுக்கான (2024-25) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறாா்.
வரும் நிதியாண்டுக்கான (2024-25) முன்பண செலவு மானிய கோரிக்கையை, பிப்ரவரி 20-ஆம் தேதியன்றும், 2023-24-ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 21-ஆம் தேதியன்றும் நிதியமைச்சர் தாக்கல் செய்யவுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ஸ்பெயினில் இருந்தபடி நிதித்துறை செயலர், தனது தனி செயலர் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது ஆளுநரின் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் பட்ஜெட் குறித்தும் அறிவுரைகளை அவர் வழங்கினார்.