கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளைப் பாதுகாக்க மாநில அரசு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புத்துக்கோவிலில் நடைபெற்றது. சங்கத் தலைவர் டி.ஏழுமலை, பொதுச்செயலாளர் கே.பி.பெருமாள், பொருளாளர் டி.ஆர்.செந்தில்குமார், வேலூர்- திருப்பத்தூர் மாவட்டப் பொறுப்பாளர் கே.சாமிநாதன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
”கறிகோழி வளர்ப்புக்கு குறைந்தபட்ச அடிப்படைக் கூலி கிலோவிற்கு ரூ.10ஆக நிர்ணயிக்க வேண்டும்.
மானியத்துடன் கூடிய மின்சாரம் வழங்கவேண்டும்.
தரமான 50 கிராம் எடையுள்ள குஞ்சுகளை நிறுவனங்கள் வழங்கவேண்டும். ஆண்டிற்கு குறைந்தபட்சம் 5 பேட்ஜ் என்ற வகையில் கோழிக்குஞ்சுகளை வழங்கவேண்டும்.
கோழிப் பண்ணைகள் அமைப்பதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கவேண்டும்.
கறிக்கோழி வளர்ப்போருக்கு நலவாரியமும் அமைக்கவேண்டும்.” என்று தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.