நச்சுப் பேச்சு... ஆளுநர் இரவிக்கு ஆயர்கள் பேரவை கடும் காட்டம்!

governor r n ravi
ஆளுநர் ரவி
Published on

ஆளுநர் இரவி சிறுபான்மையினர் மீது குறிப்பாக கிறித்துவர்கள் மீது நச்சைக் கக்கும்வகையில் பேசியிருக்கிறார் என தமிழக ஆயர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. 

கடந்த வாரம் செப்டம்பர் 7, 2004 சனிக்கிழமை அன்று சென்னை மயிலாப்பூரில் பிஎ.ஸ். கல்விக் குழுமத்தின் பொன்விழால் ஆளுநர் ஆர். என். இரவி உரையாற்றினார். அப்போது அவர், ”புதிய பாரதம் மிக எழுச்சியறுவதாய் உள்ளது என்றும், இதற்கு சமஸ்கிருத கல்வி முக்கிய பங்காற்றுகிறது என்றும் வழக்கம் போல தன்னுடைய பொய் பிரச்சாரத்தை பதிவு செய்திருக்கிறார். சிறுபான்மையினருக்கு எதிராகச் செய்ல்பட்டு வரும் ஆளுனர் ரவி இத்தகைய உண்மைக்குப் புறம்பான கருத்தை தெரிவித்து இருக்கிறார். ஆளுரர் அவர்கள் சிறுபான்மை சமூகத்தின் மீதும் சமயச் சார்பற்ற இந்திய மக்கள் மீதும் தனக்கு இருக்கும் வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாகப் பேசியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.” என்று தமிழக ஆயர் பேரவை அதிருப்தி தெரிவித்துள்ளது.

”ஆங்கிலேய அரசாங்கம் கிறிஸ்தவ மிஷினரிகளுடன் இணைத்து பாரகத்தின் அடையாளத்தை அழிக்க முற்பட்டனர் என்றும், பாரதத்தின் உணர்வை குறைப்பதற்கு இந்திய கல்வி முறையை அறித்துள்ளனர் என்றும் அவர் கூறியிருக்கிறார். அத்தோடு "நம்முடைய செல்வங்களையும், கலைப் பொக்கிஷங்களையும் திருடிச் சென்று விட்டனர்" எனவும், "தமது நாட்டில் உள்ள மக்களுக்குத் தவறான ஓர் அடையாளத்தை உருவாக்க, வரவாற்றைத் திரித்து தவறான வரலாற்றைப் புகுத்தினர்; இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு சதிச் செயல் என்றும் பொய் பிரச்சாரம் பரப்பியிருக்கிறார். ஆளுநரின் இக்குற்றச்சாட்டுக்கள் நமக்குப் பதிதல்ல; மேற்சொன்ன அனைத்திலும் பல விஷமக் கருத்துக்கள் பொதித்துள்ளன. இக்கூட்டில் ஒரு குட்சமம் ஒளிந்துள்ளது. ஆங்கிலேயர்களும் கிறிஸ்தவர்களும் ஓரணியாகவும் மற்றவர்கள் எதிரணியாகவும் இருந்தா கூறுவது முற்றிலும் வரலாற்று திரிபாகும்.” என்றும் ஆயர் பேரவையின் தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி அடிகளார் கூறியுள்ளார்.

”ஆளுநர் என்பவர் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் மாநில அரசுடன் இணைந்து செயல்படக் கடமைப்பட்டவர். ஆனால் ஆளுநர் இரவி பொய்ப் பரப்புரையை மேற்கொண்டு மீண்டும் மீண்டுமாக சிறுபான்மைச் சமூகத்தையும் அதிலும் குறிப்பாக கிறிஸ்துவச் சமூகத்தை இழிவுபடுத்தி வெட்கத்துக்குரியது. அனைத்து மதங்களையும் மரபுகளையும் அவர்கள் பெரிதும் மதிக்கின்றனர். கிறித்துவர்கள் மக்களையும் மண்ணையும் அதன் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் பெரிதும் பற்றிக்கொண்டவர்கள். மாநிலத்தின் ஒற்றுமையோடும், அமைதியோடும் வளர்ச்சியை நோக்கி நடைபோடும் மக்களின் நடுவில் வெறுப்பு அரசியல் ஒன்றைத் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறார், ஆளுநர் இரவி. மக்டையே பிரிவினையை விதைத்து மோதல்களையும் தூண்டி விடுவதற்காக சிறுபான்மையினரின் மாண்பையும் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்.” என்றும் வருத்தப்பட்டுள்ளார்.

”இந்திய சமூகத்திற்கு மிஷனரிமார்கள் ஆற்றிய கல்வித் தொண்டு, சமூகத் தொண்டு, மருந்துவத் தொண்டு ஆகியவை பற்றி இந்திய மக்கள் நன்கு அறிவர். இந்தியா இன்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு சிறுபான்மைச் சமூகமும், மிஷினரிகளும் ஆற்றிய அளப்பரிய காரியங்களை யாரும் மறக்கவும் மாட்டார்கள்; மறுக்கவும் மாட்டார்கள். இன்றளவும் அப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

உண்மையை மூடி மறைத்து, பொய்ப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து பேசி, தமிழகத்தில் அமைதியற்ற ஒரு நிலையை ஏற்படுத்திவரும் ஆளுநரை கிறிஸ்தவர்களின் சார்பாகவும் குறிப்பாக தமிழகத்திலுள்ள சிறுபான்மை சமூக மக்களின் சார்பாகவும் நட்புறவோடும் ஒற்றுமையோடும் வாழும் அனைவரின் சார்பாகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.

சாதி மதப் பிளவுகளைக் கடந்து மக்கள் ஒன்றுபட ஆளுநர் அவர்கள் வழிகாட்ட வேண்டும். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதை சீர்குலைப்பதிலிருந்து விலகி தான் வகிக்கும் பதவிக்குரிய மேன்மையான அரசியல் சாசனப் பணிகளை மட்டும் ஆற்றிட கேட்டுக்கொள்கிறோம். இது போன்ற நிகழ்வுகள் இனிமேலும் நடக்காத வண்ணம் அவர் கண்ணியமாகப் பேசவும் அனைவரையும் சமமாக நடத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.” என்று ஜார்ஜ் அந்தோணிசாமி அடிகள் தன் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com