22ஆம் தேதிவரை சட்டப்பேரவைக் கூட்டம்- அப்பாவு

22ஆம் தேதிவரை சட்டப்பேரவைக் கூட்டம்- அப்பாவு
Published on

நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 22ஆம் தேதிவரை நடைபெறும் என்று பேரவைத்தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று காலையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் காலை 10 மணியளவில் தொடங்கியது. மரபுப்படி அரசினது உரையை ஆளுநர் ஆர்.என்.இரவி வாசிக்காமல், அதிருப்தி தெரிவித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் பேசி தன் இருக்கையில் அமர்ந்துகொண்டார். அவருடைய உரையின் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் அப்பாவு வாசித்தார்.

பின்னர், பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூடியது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி செய்தியாளர்களிடம் கூறினார். “ நாளை 13ஆம் தேதியன்று காலை அவை கூடியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். அடுத்த இரண்டு நாள்களும் அந்த விவாதம் தொடரும்; 15ஆம் தேதி பதிலுரை இடம்பெறும்.” என்றும்,

மூன்று நாள்களுக்குப் பிறகு 19ஆம் தேதியன்று நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் 20ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை அவையில் வைக்கப்படும். இரு நிதிநிலை அறிக்கைகளின் மீதான விவாதத்தைத் தொடர்ந்து, 22ஆம் தேதி பதிலுரை இடம்பெறும் என்றும் பேரவைத்தலைவர் அப்பாவு கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com