ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… முதல் 3 குற்றவாளிகள் யார்? - குற்றப்பத்திரிகையில் ட்விஸ்ட்!

(வலமிருந்து) நாகேந்திரன், சம்போ செந்தில், அஸ்வத்தாமன்
(வலமிருந்து) நாகேந்திரன், சம்போ செந்தில், அஸ்வத்தாமன்
Published on

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக நாகேந்திரனும், இரண்டாவது குற்றவாளியாக சம்போ செந்திலும் மூன்றாவது குற்றவாளியாக அஸ்வத்தாமனும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம், சீசிங் ராஜா இருவரும் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக (ஏ1) நாகேந்திரனும், இரண்டாவது குற்றவாளியாக (ஏ2) தலைமறைவாக உள்ள சம்போ செந்தில், மூன்றாவது குற்றவாளியாக (ஏ3) ஆக அஸ்வத்தாமன் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிறையில் இருந்து திட்டம் தீட்டியதற்காக நாகேந்திரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 28 பேரில் 25 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com