இவங்களும் தேர்தலில் நிக்குறாங்களா…?

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி
Published on

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், விக்கிரவாண்டியில் திமுக, பாமக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 64 பேர் போட்டியில் உள்ளனர்.

விக்கிரவாண்டி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, காலியாக இருந்த அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 14 ஆம் தேதி வேட்பு மனு தொடங்கிய நிலையில் இன்றுடன் முடிவடைந்தது. ஜூலை 10 ஆம் தேதி வாக்கு பதிவும், ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று காலை வேட்பு மனுதாக்கல் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:

“ஒரு 2 வருட காலமாக எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்க முடியுமோ அவ்வளவு கொடுமைகளை அனுபவித்து இருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதிகாரமும் இருக்க வேண்டும். அது இருந்தால் தான் நிறைய மக்களுக்கு நாம் சேவை செய்ய முடியும்.

என்னுடைய முழு நோக்கமே மக்களுக்கு சேவை செய்யனும். நான் பட்ட துயரைத்தை மக்களும் படக்கூடாது என்ற முழு நோக்கத்தோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். மக்கள் எனக்கு ஒரு வாய்ப்பு தருமாறு மடிப்பிச்சையாக கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com