பாலஸ்தீனத்தில் போரை நிறுத்தக்கோரி இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம், இந்திய சோவியத் நட்புறவுக் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், வடசென்னை, கொருக்குப்பேட்டையில் உள்ள கே.என்.எஸ். டிப்போ பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சோவியத் நட்புறவுக் கழக மாநிலச் செயலாளர் மதன் சந்திரசேகர், மாநில துணைத்தலைவர் தமிழ் மது, மாதர் சம்மேளன மாநிலத் தலைவர் ஜி.மஞ்சுளா, தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலச் செயலாளர் கீ.சு. குமார், இளைஞர் பெருமன்ற மாநிலத் தலைவர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி ஆகியோர் உட்பட பலரும் பேசினர்.
மாலையில் தென்சென்னை, சைதாபேட்டை கலைஞர் கருணாநிதி பொன்விழா வளைவு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மையக் குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் தலைமைவகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீம்ராவ், அக்கட்சியின் தென்சென்னை மாவட்டச்செயலாளர் வேல்முருகன் உட்பட பலரும் பேசினர்.
பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு துணைபோகக்கூடாது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.