அண்ணாமலை
அண்ணாமலை

உளறுகிறார் உதயநிதி - அண்ணாமலை கடும் தாக்கு!

Published on

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை உளறலாகத்தான் பார்க்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இவ்வாறு அவர் கருத்துத் தெரிவித்தார்.

மேலும், “தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, குடி போன்றவை அதிகரித்து விட்டது. அதை கவனத்தில் கொள்ளாமல், முதலமைச்சர் பாட்காஸ்டில் பேசிக் கொண்டிருக்கிறார். நம்முடைய உள்வீட்டுப் பிரச்னைகளைப் பேசவேண்டும்.” என்றும்,

”தமிழ்நாட்டுப் பிரச்னையை மட்டும் வைத்து ஓட்டு கேட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று முதலமைச்சர் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டு இருக்கிறார். 30 மாதங்களாக, தான் செய்த சாதனைகளைப் பேசாமல் வட இந்தியாவைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருக்கிறார். முதலமைச்சரே, இந்தியாவைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக தமிழகத்தைப் பற்றி பேசுங்கள்.” என்றும் அண்ணாமலை கூறினார்.

“ மோடி என்ற சமூகத்தை இழிவுபடுத்திவிட்டு, ஆறு மாத காலம் ராகுல் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். இறுதியில் என்ன ஆனது... பதவி பறிபோனது. உச்சநீதிமன்றம் என்ன சொன்னது? ராகுல் காந்தி நிரபராதி இல்லை. அவரைப் பதவி நீக்கம் செய்து, மறுபடி ஒரு தேர்தலைக் கொண்டுவந்து வாக்காளர்களுக்குத் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை என்றது. அதேபோலத்தான் உதயநிதி ஸ்டாலின். வட இந்தியாவுக்கு ராகுல் காந்தி என்றால், தென்னிந்தியாவுக்கு உதயநிதி. வட இந்திய பப்பு ரகுல் காந்தி, தென்னிந்திய பப்பு உதயநிதி.” என்று சர்ச்சைக்குரிய வகையிலும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

”உதயநிதி ஸ்டாலின் திரும்பத் திரும்ப பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை; டெல்லியில் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்: தான் சொல்வது தவறு என்று தெரியாமலேயே ஒருவர் பேசுகிறார் என்றால் அது உளறல். உதயநிதி ஸ்டாலினின் பேச்சை உளறலாகத்தான் பார்க்கிறேன்.” என்றார் அண்ணாமலை.

logo
Andhimazhai
www.andhimazhai.com