சென்னையில் அந்திமழை இளங்கோவனின் நூல் வெளியீடு, நினைவேந்தல்!

அந்திமழை இளங்கோவனின் நூலை நீதிபதி சந்துரு வெளியிட, எழுத்தாளர்கள் எஸ்.இராமகிருஷ்ணன், பாமரன் பெற்றுக்கொண்டனர்.
அந்திமழை இளங்கோவனின் நூலை நீதிபதி சந்துரு வெளியிட, எழுத்தாளர்கள் எஸ்.இராமகிருஷ்ணன், பாமரன் பெற்றுக்கொண்டனர்.
Published on

அந்திமழை இதழின் நிறுவிய ஆசிரியர் அந்திமழை ந. இளங்கோவன் தொகுத்து, எழுதிய அரசியல் கட்சிகளின் மரணம் எனும் நூல் சென்னையில் இன்று வெளியிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு வெளியிட, எழுத்தாளர்கள் எஸ்.இராமகிருஷ்ணன், பாமரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  

அண்மையில் மறைந்த இளங்கோவனின் நினைவேந்தல் நிகழ்வாகவும் நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டத்தில் அனைவரும் எழுந்துநின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அஞ்சல்துறை தலைவர் மருத்துவர் நடராஜன், தமிழக- புதுவை தலைமைக் கணக்காயர் மருத்துவர் கே.பி.ஆனந்த், பத்திரிகையாளர் ப.திருமாவேலன்,ஓவியக் கலைஞர் டிராட்ஸ்கி மருது, மிக மூத்த பத்திரிகையாளர் ராவ்,

அமைச்சர் சிவசங்கர், மருத்துவர் என். கண்ணன், ஐ.ஜி., மிக மூத்த கார்ட்டூனிஸ்ட் மதன், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், மருத்துவர் மாரியப்பன், எழுத்தாளர் பாமரன், எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி, இயக்குநர் ராசி. அழகப்பன், நீதிபதி சந்துரு, வழக்கறிஞர் சங்கர்,  

திரை எழுத்தாளர் ஜா.தீபா, ஒளிப்பதிவாளர் ரவிசங்கர், ஓய்வுநிலை கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் மு. செந்தமிழ்ச்செல்வன், திருவேங்கிமலை சரவணன், சுந்தரபுத்தன்,

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார், இயக்குநர் கரு. பழனியப்பன் ஆகியோர் (கால வரிசைப்படி) பேசினர்.  

அந்திமழை இளங்கோவன் குடும்பத்தின் சார்பில், இளங்கோவன் அவர்களின் தம்பி மருத்துவர் கபிலன், அவரின் மனைவி மீனா ஆகியோர் பேசினர். 

சமூக ஊடகங்களில் தான் எழுதிவந்த நிலையில் தன்னை ஒரு பத்திரிகையில் எழுதச்செய்தவர் என அமைச்சர் சிவசங்கர் குறிப்பிட்டார். 

பேசியவர்களில் பெரும்பாலானவர்கள், தாங்கள் எழுதுவதற்கு அந்திமழை இளங்கோவன் உந்துதலாகவும் உற்சாகமூட்டுபவராகவும் இருந்ததை விவரங்களுடன் நினைவுகூர்ந்தனர். 

முன்னதாக, அந்திமழை இளங்கோவன் அவர்கள் பல்வேறு கல்லூரி மாணவர்களிடையே கலந்துரையாடிய, உரையாற்றிய நிகழ்வுகளும் அவரின் வாழ்க்கைக் கட்டங்களின் படங்களும் அடங்கிய காணொலி திரையிடப்பட்டது. அதைப் பார்த்தும் பேச்சின்போது குறிப்பிட்டும் பலரும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com