தமிழ் நாடு
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கான உடன்பாடு பா.ஜ.க. மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில் சற்று முன்னர் கையெழுத்தானது. அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை இருவரும் கையெழுத்திட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், எந்தெந்தத் தொகுதிகள் என்பதை பா.ஜ.க. அறிவிப்பதுதான் நியாயமாக இருக்கும் என்றார்.
தான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்குள்ளேயே ஒன்பது தொகுதிகளில்தான் போட்டியிடவே விருப்பம் தெரிவித்தார்கள் என்றும் தினகரன் சொன்னார்.
தேவநாதன் கட்சிக்கும் ஜான் பாண்டியன் கட்சிக்கும் தலா ஓர் இடம் என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.