தெலுங்கு மக்கள் குறித்த அவதூறாக பேசிய வழக்கில் ஹைதராபாத்தில் கைதான நடிகை கஸ்தூரியை காவல்துறை சென்னை அழைத்து வந்தது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடர்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடா்பாக அவா் மீது மதுரை நாயுடு மகாஜன சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருநகா் போலீஸாா் வழக்குப் பதிந்தனர்.
இதனிடையே, நடிகை கஸ்தூரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமர்வில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் மனுதாரரின் பேச்சில் வெறுப்புணா்வு உள்ளதால், அவரது முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா். இதனைத் தொடர்ந்து தலைமறைவான கஸ்தூரியை காவல் துறையினர் தேடிவந்தனர்.
இந்த நிலையில், ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரியாளர் ஹரிகிருஷ்ணனின் வீட்டி தங்கியிருந்த கஷ்தூரியை சென்னை தனிப்படை காவல்துறை நேற்று மாலை கைது செய்தனர்.
இதையடுத்துது சாலை மார்க்கமாக நடிகை கஸ்தூரி இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.