தமிழ்நாட்டில் ரூ. 2000 கோடி முதலீடு செய்கிறது ஜேபிஎல் நிறுவனம்!

ஜேபிஎல் நிறுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானபோது
ஜேபிஎல் நிறுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானபோது
Published on

திருச்சியில் ஜேபிஎல் நிறுவனத்துடன் ரூ. 2000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில், தமிழக அரசுடன் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில், ஆப்பிள், சிஸ்கோ, எச்.பி. நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை ரூ. 2000 கோடி முதலீட்டில் திருச்சியில் அமைகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதைபோல காஞ்சிபுரத்தில் உள்ள ராக்வெல் ஆட்டோமேஷன் (Rockwell Automation) தனது தொழிற்சாலையை ரூ.666 கோடியில் விரிவாக்கம் செய்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com