ஜெயலலிதா சேலை இழுப்பு விவகாரம்…அதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 32 தீர்மானங்கள்!

அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி
அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி
Published on

மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவை பின்வருமாறு.

1. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநாட்டு ஏற்பாட்டாளர்கள், அதிமுக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

2. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும் நன்றியும் இதயப்பூர்வமான பாராட்டும்.

3. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக நல்லாட்சி தந்தவர். நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்த பொதுச்செயலாளர்.

4. அதிமுகவில் 2 கோடிகளுக்கு மேல் உறுப்பினர்களை சேர்க்கை பாடுபட்ட அதிமுகவின் மாவட்ட, மாநில, பிற மாநில நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பாராட்டும் நன்றியும்.

5. இந்திய திருநாட்டிலேயே 2 கோடிக்கும் மேல் உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட ஒரே இயக்கம் அதிமுக.

6. திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்.

7. தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் வழி கல்வியை ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்தல்.

8. அரசியல் அமைப்பு சட்டம் மூலம் தமிழை ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்தல்.

9. புதுச்சேரியை மாநிலமாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல்

10. மின்கட்டண உயர்வுக்காக தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்.

11. மகளிர் உரிமைத் தொகை வழங்க பல கட்டுப்பாடுகள் விதித்த தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்.

12. வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழ்நாடு அரசுக்கு கண்டனம். தமிழ்நாட்டை இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக மாற்றிய விடியா அரசுக்கு கண்டனம்.

13. விவசாயிகளுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும் தமிழ்நாடு அரசுக்கு கண்டனம். 15 கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்.

16. நினைத்ததை முடிப்பவன் நான் என புரட்சித் தலைவர் பாடினார். அதன்படி நினைத்ததை முடித்தவர் எடப்பாடி பழனிச்சாமி என தீர்மானம்

17. தமிழ்நாட்டில் தொழில் வளத்தை அகல பாதாளத்திற்கு கொண்டு தமிழ்நாடு அரசை கண்டித்து தீர்மானம்.

18. நெசவாளர் விரோதப் போக்கை கடைபிடித்து வரும் தமிழ்நாடு அரசை கண்டித்து தீர்மானம்.

19. உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை எடுத்து, வேறு பல திட்டங்களுக்கு செலவழிக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்து தீர்மானம்.

20. காவிரி - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை கிடப்பில் போட்டுள்ள தமிழ்நாடு அரசைக் கண்டித்து தீர்மானம்.

21. கோதாவரி - காவிரி இணைப்பு திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தாத தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

22. பட்டியலின மக்களுக்கான நிதியை வேறு பல திட்டங்களுக்குப் பயன்படுத்தும் தமிழ்நாடு அரசை கண்டித்து தீர்மானம்.

23. கடலில் பேனா சின்னம் அமைக்கத் துடிக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்து தீர்மானம்.

24. மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

25. அதிமுக நிர்வாகிகள் மீது போடப்படும் பொய் வழக்குகளை எதிர்கொண்டு வெல்வோம் என சூளுரைத்து தீர்மானம்

26. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முடக்காமல் செயல்படுத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம்.

27. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம்.

28. சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை (சேலை இழுப்பு) மறைக்கும் மு.க.ஸ்டாலினை கண்டித்து தீர்மானம்.

29. அதிமுகவில் இருந்து துரோகிகளைகளை எடுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டி தீர்மானம்

30. மக்கள் விரோத ஊழல் ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தீர்மானம்.

31. 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், எடப்பாடி பழனிச்சாமி வகுத்து தரும் திட்டங்களின் படி, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க சூளுரை.

32. அடுத்து வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு முதலமைச்சராக்க சபதம் ஏற்போம் என தீர்மானம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com