3 persons bone fracture in kavaraippettai train accident admitted stanely medical college hospital
ரயில் விபத்தில் எலும்புமுறிந்துபோன 3 பேருக்கு ஸ்டான்லியில் சிகிச்சை!

ரயில் விபத்தில் 3 பேருக்கு எலும்புமுறிவு!

- ஸ்டான்லியில் சிகிச்சை, உதயநிதி நலம்விசாரிப்பு!
Published on
3 persons bone fracture in kavaraippettai train accident admitted stanely medical college hospital
ரயில் விபத்தில் எலும்புமுறிந்துபோன 3 பேருக்கு ஸ்டான்லியில் சிகிச்சை!
3 persons bone fracture in kavaraippettai train accident admitted stanely medical college hospital
ரயில் விபத்தில் எலும்புமுறிந்துபோன 3 பேருக்கு ஸ்டான்லியில் சிகிச்சை!

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ஏற்பட்ட இரயில்விபத்தில் 19 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் மூன்று பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவர்களை மேல்சிகிச்சைக்காக சென்னை, இராயபுரம் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இராகுல்குமார், சந்தன்குமார், பிரியந்த் ஆகிய மூவரும் ஸ்டான்லியில் சேர்க்கப்பட்ட தகவல் அறிந்ததும், இரவோடு இரவாக துணைமுதலமைச்சர் உதயநிதி அங்கு சென்றார். மூவரிடமும் நலம்விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரத்தையும் கேட்டறிந்தார். வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி ஆகியோரும் உடனிருந்தனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com