திருச்செந்தூர் முருகன் கோயிலில் 27 வயது யானை தெய்வானை பராமரிக்கப்பட்டு வருகிறது. அன்றாடம் கோயில் வளாகத்திலும், முக்கிய நாள்களில் சுற்று வட்டாரத்திலும் இது வலம் வருவது வாடிக்கை.
வழக்கம்போல, யானை இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கோயில் வளாகத்தில் இருந்தபோது பாகன் உதயகுமார் உடனிருந்தார். அப்போது கோயிலுக்கு வந்த சிசுபாலன் எனும் பக்தர் யானைக்கு அருகில் வந்து செல்ஃபி படம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் அவர்கள் நடந்துகொண்டது, யானைக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் அது இருவரையும் தாக்கியது. யானை மிதித்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதில், சிசுபாலன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பாகன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனயில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அது பலனளிக்காமல் போகவே உயிரிழந்தார்.
ஒரே நாளில் இரண்டு பேர் யானை மிதித்து இறந்துபோனது கோயிலில் உள்ளவர்களுக்கும் சுற்றியுள்ளவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.