சவுக்கு சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்!

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்
Published on

போதைப் பொருள் வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் போதைப் பொருள் வைத்திருந்ததாக யூட்டியூபர் சவுக்கு சங்கர் கைதுசெய்யப்பட்டார். அத்துடன் அவருடைய சென்னை வீடு, அலுவலகம் என பல இடங்களிலும் தேனி மாவட்ட காவல்துறையினர் தேடுதல்சோதனை நடத்தினர்.

இதனிடையே அவர் வேறு வழக்குகளில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பல இடங்களில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் நிலையில் சங்கர் தங்களை இழிவுபடுத்தியதாக புகார் அளிக்க, அதன்படி வழக்குகள் பதியப்பட்டன.

அந்தந்த வழக்குகளில் சங்கரை காவல்துறையினர் ஊர்ஊராக அலையவிடும் நிலையில், திருச்சியில் ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். 

அதைத் தொடர்ந்து, தேனி மாவட்ட காவல்துறையினர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சங்கரை 7 நாள்கள் காவலில் எடுக்க அனுமதி கேட்டனர்.  

ஆனால், நீதிபதி செங்கமலச்செல்வன் 2 நாள்களுக்கு மட்டும் சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். சங்கருடைய வழக்குரைஞர் ஒரு நாளுக்கு 3 முறை அவரைச் சந்திக்கவும் நீதிபதி அனுமதி வழங்கினார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com