தமிழ் நாடு
சென்னையை அடுத்த திருவள்ளூர், கவரப்பேட்டை அருகே தொடர்வண்டிகள் மோதிக்கொண்டதில் 2 பெட்டிகள் எரிந்து சேதமாகின.
நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில்வண்டி மீது பயணிகள் வண்டி மோதியதால் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீட்புப் படையினரும் இருப்புப்பாதை காவல்துறையினரும் தொடர்வண்டிப் பாதுகாப்புப் படையினரும் அங்கு விரைந்துள்ளனர்.
சேத விவரம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.