சிவகாசி: ஒரே நாளில் 2 பட்டாசு விபத்துகள்,14 பேர் பலி; தடுக்க வலியுறுத்தல்!

சிவகாசி பட்டாசு விபத்து
சிவகாசி பட்டாசு விபத்து
Published on

சிவகாசி அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்துகளில் 14 பேர் உயிரிழந்த கோரம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி, எம்.புதுப்பட்டி வெங்க பாளையம், கிச்ச நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள்ள பட்டாசு ஆலைகளில் இன்று அடுத்தடுத்து வெடிவிபத்துகள் ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்தனர் ; பலர் காயமுற்றுள்ளனர். 

தமிழகத்தையே உலுக்கியெடுத்துள்ள இந்த விபத்துகள் குறித்து முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ” தீபாவளிப்  பண்டிகை  நெருங்கும்  நிலையில், பட்டாசு ஆலைகள், கடைகளில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு  கொடும்  விபத்துகள் தொடர் கதையாகும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.” என்று கூறியுள்ளார். 

“பட்டாசு ஆலை விபத்துகள் பெரும்பாலும் பாதுகாப்பு குறைபாடுகளால் ஏற்படுகின்றன. எனவே, பாதுகாப்பு விதிகள் குறித்த அரசு கண்காணிப்பை அதிகரிப்பதுடன், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், பிரிமீயம் தொகையினை சம்பந்தப்பட்ட பட்டாசுநிறுவனங்கள் செலுத்திட உத்தரவிட வேண்டுமெனவும், கூடுதல் நிவாரணத்தை உறுதி செய்ய வேண்டும்.” என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.


பா.ம.க. நிறுவனர் இராமதாசு, ”வாரத்திற்கு ஒரு விபத்து என்பது வாடிக்கையாகி விட்டது. பட்டாசு ஆலைகள் தொடர்பான பாதுகாப்பு விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதது தான் இத்தகைய  விபத்துகள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். பட்டாசு ஆலை  பாதுகாப்பு விதிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இத்தகைய விபத்துகளை  தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com