வடகிழக்குப் பருவமழையின் ஐந்தாவது பொழிவாக நேற்று தொடங்கிய மழையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியில் அதிக அளவாக 14 செ.மீ. பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, கிழக்குக் கடற்கரைப் பகுதி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. புதுச்சேரியிலும் மழை பெய்துவருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் 11.7 செ.மீ., கொள்ளிடத்தில் 10.6 செ.மீ., மணல்மேட்டில் 9.8 செ.மீ. மழையளவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது.
காலை 10 மணிவரை விழுப்புரம், தஞ்சை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், இராமநாதபுரம் உட்பட 22 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உண்டு என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.