கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வி.சி.க. மகளிர் அமைப்பு சார்பில், மது- போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு இன்று நடைபெற்றது. இதில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், மதுவிலக்குக்கைச் செயல்படுத்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி தரவேண்டும் என வலியுறுத்தி முக்கியமான தீர்மானம் இயற்றப்பட்டது.
மதுவிலக்குக்காக தேசிய சட்டம் இயற்றவேண்டும், மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும், தமிழ்நாட்டில் மதுவிலக்கைச் செயல்படுத்த கால அட்டவணை வெளியிட வேண்டும், மது- போதை விழிப்பூட்டல் இயக்கத்தில் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்த வேண்டும், குடிநோயாளிகளுக்கு நச்சுநீக்க சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் மையம் அமைக்கவேண்டும், அனைத்து வட்டாரங்களிலும் போதைமீட்பு நோயாளிகளுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கவேண்டும், டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கவேண்டும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன தீர்மானங்களில் இடம்பெற்றுள்ளன.