இலங்கை புதிய அமைச்சரவையில் பெண் உட்பட 2 தமிழர்கள்!

Sri Lanka Anura kumara Dissanayake's new cabinet swore in today
இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரியா மீண்டும் பதவியேற்பு
Published on

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரு பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டது. பிரதமராக ஹரிணி மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

அதிபர் அனுர குமார திசாநாயக்கா, பாதுகாப்பு, நிதி, டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளைத் தனவசமே வைத்துக்கொண்டார்.

Ramalingam Chandrasekar, Sri lanka minister
இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை அமைச்சர்

யாழ்ப்பாண மாவட்டதேசிய மக்கள் சக்தி அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் கடல் தொழில், நீரியல், கடல் வளங்கள் துறையின் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். தேர்தலில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்படாத இவர், தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக ஆகியுள்ளார்.

இலங்கை அமைச்சர் சரோஜா சாவித்திரி
இலங்கை அமைச்சர் சரோஜா சாவித்திரி

இவரைப் போல இன்னொரு தமிழரான சரோஜா சாவித்ரி போல்ராஜ் மகளிர், சிறுவர் விவகாரங்கள் துறை அமைச்சராகப் பதவியேற்றார். இவர், மாத்தறை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு 1,48, 379 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் சேர்த்து தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் மூலமாக 12 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சந்திரசேகரன் மட்டுமே தேசியப் பட்டியல் மூலமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் உட்பட மொத்தம் இருபத்தொரு அமைச்சர்களுக்கு அரசு அதிபர் அனுர குமார திசநாயக்கா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதிபர் மாளிகையில் இன்று காலையில் பதவியேற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற்றது.  

அமைச்சர்கள், அவர்களின் துறை விவரம்:

  1. ஹரிணி அமரசூர்ய: பிரதமர் & கல்வித்துறை அமைச்சர்

  2. நலிந்த ஜயதிஸ்ஸ: சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர்

  3. கே.டி லால்காந்த: வேளாண்மை, கால்நடை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்

  4. விஜித ஹேரத்: வெளிநாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்

  5. பேராசிரியர் சந்தன அபேரத்ன: பொது நிர்வாகம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

  6. சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார: நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

  7. சரோஜா சாவித்திரி போல்ராஜ்: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்

  8. அனுர கருணாதிலக: நகர்ப்புற வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் வீட்டு வசதி அமைச்சர்

  9. இராமலிங்கம் சந்திரசேகர்: கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வள அமைச்சர்

  10. பேராசிரியர் உபாலி பன்னிலகே: கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சர்

  11. சுனில் ஹந்துன்நெத்தி: கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர்

  12. ஆனந்த விஜேபால: பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்

  13. பிமல் ரத்னாயக்க: துறைமுகங்கள் அமைச்சர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

  14. பேராசிரியர் சுனில் செனவி: புத்தசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர்

  15. சமந்த வித்தியரத்ன: பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்

  16. சுனில் குமார கமகே: விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

  17. வசந்த சமரசிங்க: வர்த்தகம், வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

  18. பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன: விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்

  19. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ: தொழிலாளர் அமைச்சர்

  20. குமார ஜெயக்கொடி: எரிசக்தி அமைச்சர்

  21. தம்மிக்க படபாண்டி: சுற்றுச்சூழல் அமைச்சர்

logo
Andhimazhai
www.andhimazhai.com