இலங்கையில் இன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவானதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துல்லியமான அளவு பின்னர் வெளியாகும்.
வாக்குப்பதிவு முடிந்ததுமே மாலை 4 மணி முதல் அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அரசு ஊழியர்கள் உட்பட முன்கூட்டியே வாக்கு செலுத்தியோர் மொத்த வாக்காளர்களில் 5 முதல் 6 சதவீதம்வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
மாலையில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு தாண்டியும் தொடரும் என்றும் நள்ளிரவு முதல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ரத்நாயக்கா தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக நுவரெலியா மாவட்டத்தில் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தலைநகர் கொழும்பில் 75%,
புத்தளம் மாவட்டத்தில் 78%,
மொனராகலையில் 77%,
பதுளையில் 73%,
கண்டியில் 76%,
இரத்தினபுரி தேர்தல் மாவட்டத்தில் 74%
கேகாலையில் 72%
குருநாகல் மாவட்டத்தில்70%
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 65.9%,
வன்னி தேர்தல் மாவட்டத்தில் 65%
மட்டக்களப்பு 64% என வாக்குகள் பதிவாகியுள்ளன என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈழத்தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்திலும் மகிந்த ராஜபக்சேவின் மாவட்டமான அம்பந்தோட்டையில் குறைவாகவும் வாக்குகள் பதிவாகியுள்ளன.