இலங்கையிலிருந்து தமிழக மீனவரின் உடல் வந்தது!

கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழக மீனவர் மலைச்சாமியின் உடல்
கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழக மீனவர் மலைச்சாமியின் உடல்
Published on

இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட இராமேசுவரம் மீனவர் மலைச்சாமியின் உடல், படகு மூலம் இன்று அதிகாலையில் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டது.

கடந்த புதன்கிழமை அன்று இராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற விசைப்படகுகளில், கார்த்திகேயனின் படகில் இருந்த நான்கு பேர் கடலுக்குள் தள்ளப்பட்டனர். அப்போது, அப்படகிலிருந்து 59 வயது மலைச்சாமி மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இருவரும் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனிடையே, இலங்கை அரசுக்கு தூதரகரீதியாக இந்திய அரசு தன் கண்டனத்தைத் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து, பிடித்துவைக்கப்பட்டிருந்த மீனவர்கள் இருவரும் வழக்கு ஏதும் பதியப்படாமல், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மாயமான 64 வயது இராமச்சந்திரனைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

உயிரிழந்த மலைச்சாமியின் உடலையும் கூராய்வுக்குப் பின்னர், இந்திய தூதரக அதிகாரிகளிடம் இலங்கைத் தரப்பினர் ஒப்படைத்தனர்.

நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து இலங்கை கடற்படையின் படகில் இரு மீனவர்களையும் மலைச்சாமியின் உடலையும் அனுப்பிவைத்தனர்.

சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்தியக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், கடற்படையின் ஐஎன்ஸ் பித்ரா கப்பல் மூலம் இன்று அதிகாலையில் இராமேசுவரத்துக்குக் கொண்டுவரப்பட்டு, மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இரு மீனவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

மலைச்சாமியின் உடலை மீன்வளத் துறையினர் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com