நடந்துமுடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுரகுமார திசநாயக்காவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியே அதிக இடங்களை பிடித்து முன்னிலையில் உள்ளது.
அடுத்தபடியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி வந்துள்ளது.
ஈழத் தமிழர் கட்சிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கை முஸ்லிம் காங்கிரசும் இடங்களைப் பிடித்துள்ளன.
தற்போது வரை கிடைத்துள்ள தகவலின்படி, தேசிய மக்கள் சக்தி 123 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி 31 இடங்களையும் இராஜபக்சேவின் இலங்கை பொதுமக்கள் முன்னணி 2 இடங்களையும், புதிய ஜனநாயக முன்னணி மூன்று இடங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆறு இடங்களையும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஓர் இடத்தையும் வென்றுள்ளன.