கடந்த இரண்டு வாரங்களில் இந்தியாவிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் குவிகின்றனர்.
கடுமையான நெருக்கடிக்குள் சிக்கியிருந்த இலங்கை சுற்றுலா துறையும் பாதிக்கப்பட்டது. இந்தியா, சீனா உட்பட்ட நாடுகளின் உதவியால் பொருளாதாரரீதியாகச் சமாளித்துக்கொண்ட இலங்கையில், அண்மைக் காலமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்த மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் 55 ஆயிரத்து 353 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்திருப்பது முன்னேற்றம் என சுற்றுலாத் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இந்தியாவிலிருந்து அதிக அளவிலான பயணிகள் இலங்கைக்கு வந்துசென்றுள்ளனர். இந்த இரு வாரங்களில் 16 ஆயிரத்து 163 பேர் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
அடுத்ததாக, சீன நாட்டிலிருந்து 3 ஆயிரத்து 963 பேரும், பிரிட்டனிலிருந்து 3 ஆயிரத்து 926 பேரும் இலங்கைக்குள் சுற்றுலா வந்துசென்றுள்ளனர் என்று அந்நாட்டின் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.