விடுதலைப்புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை!

ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம்
Published on

இலங்கையில் தனி நாடு கேட்டுப் போராடிவந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் மேலும் ஆறு மாதங்களுக்குத் தடையை நீட்டித்துள்ளது.

நேற்று கூடிய ஒன்றியத்தின் கவுன்சிலானது இந்த முடிவை எடுத்தது.

இலங்கை அரசுத் தரப்பில் இத்தடையை வரவேற்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்பாடுகளும் தீர்மானமும் சாதகமானவை எனப் பாராட்டியுள்ளது.

முதன் முதலில் கடந்த 2006ஆம் ஆண்டு மே 29ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியமானது, புலிகள் அமைப்பு மீது தடையை விதித்தது. இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த அந்தக் காலகட்டத்தில், அத்தடையை எதிர்த்து பல ஐரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனாலும் தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இப்போதைய தடை நீட்டிப்பு மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளில் புலிகள் அமைப்பு, அதைச் சார்ந்த ஆட்கள், குழுக்கள், உடைமைகளுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து தடை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com