பெனடிக்ட் நிர்மலா, இலங்கை, யாழ்ப்பாணம் மீனவர் சங்கப் பொருளாளர்
பெனடிக்ட் நிர்மலா, இலங்கை, யாழ்ப்பாணம் மீனவர் சங்கப் பொருளாளர்

’தாலிய மீட்கமுடியல்ல’- இலங்கை மீனவர்கள் கண்ணீர்!

Published on

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி ஈழத்தமிழர்களின் மீன்பிடி வலைகளை இந்திய தமிழக மீனவர்கள் இழுவைப்படகுகள் மூலம் அறுப்பதாக அந்நாட்டில் குற்றஞ்சாட்டப்படுகிறது. 

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் நேற்று ஊடகத்தினரிடம் பேசிய வலிகாமம் தென்மேற்கு கடல் தொழிலாளர் சமாசத்தின் பொருளாளர் பெனடிக்ட் நிர்மலா, இந்தப் பிரச்னை குறித்து விவரித்தார்.

” இந்திய(தமிழக) இழுவைப் படகுக்காரர்களால் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக இன்னல்களை அனுபவித்துவருகின்றோம். ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இங்குள்ள மீனவரின் மீன்பிடி வலைகளை அவர்கள் அறுத்துவிட்டுச் செல்கிறார்கள். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் எமது மீனவர்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

(நேற்று) வியாழக்கிழமை மூன்று இந்திய இழுவைப் படகுகள் எமது கடற்பரப்பில் அத்துமீறின. கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களால் இருபதுக்கும் மேற்பட்ட எமது மீனவர்களின் வலைகள் அறுத்து நாசம்செய்யப்பட்டுள்ளது. இதற்கு யார் இழப்பீடு வழங்குவது?

இந்த இழுவைப் படகுகளால் கோடிக்கணக்கான ரூபாய் இழந்தநிலையில் பலரின் நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளன. எனது பிள்ளைகளின் வலைகளும் அறுக்கப்பட்டதால் என் தாலியை அடகுவைத்தேன். அதை மீட்கமுடியாது உள்ளது. எனவே, இந்திய இழுவைப் படகுகளை எமது கடற்பரப்புக்குள் விடாமல் கடற்படை தடுக்கவேண்டும்.” என்று பெனடிக்ட் நிர்மலா கூறினார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com