மகிந்த இராஜபக்சே
மகிந்த இராஜபக்சே

இராஜபக்சேவின் ஹெலிகாப்டர் பயணங்கள் எத்தனை?

Published on

இலங்கை அரசின் அதிபர் பதவியில் இருந்தவர்கள் விமானப் படை ஹெலிகாப்டரைப் பயன்படுத்திக்கொள்வது அவர்களின் சிறப்புரிமை. அப்படி முன்னாள் அதிபர்களின் ஹெலிகாப்டர் பயண விவரங்களை அந்நாட்டு விமானப் படை தலைமையகத்திடம் தகவல் உரிமை மனு மூலம் கோரப்பட்டது. ஆனால், அதன்படியான தகவல்களை தர மறுக்கவே, அந்த மனுதாரர் தகவல் உரிமை ஆணைக் குழுவில் முறையிட்டார்.

அதையடுத்து, உரிய தகவல்களை அளிக்க ஆணைக்குழு உத்தரவிட்டது. அதன்படி கிடைத்த தகவலின்படி, மகிந்த இராஜபக்சே 2005- 2015 காலகட்டத்தில் 978 முறை விமானப் பயணங்களை மேற்கொண்டது தெரியவந்துள்ளது.

அவரையடுத்து அப்பதவிக்கு வந்த மைத்திரி பால சிறிசேனா தன்னுடைய 5 ஆண்டு பதவிக்காலத்தில், 557 முறை விமானங்களில் பயணம் செய்துள்ளார் என்பதும் தெரிந்துள்ளது.

ஒப்பீட்டளவில், மைத்திரிதான் அதிக அளவில் விமானப் படை ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான தரவுகள் அளிக்கப்படாததால், மற்ற முன்னாள் அதிபர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com