இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அனுரகுமார திசநாயக்கா!

Anura Kumara Dissanayake
அனுரகுமார திசநாயக்கா
Published on

இலங்கையின் புதிய அதிபராக அனுரகுமார திசநாயக்கா இன்று பதவி ஏற்றார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அண்டை நாடான இலங்கையில், அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அந்த நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக மிகவும் அதிகபட்சமாக 38 பேர் இதில் போட்டியிட்டனர். இரண்டாம் சுற்று ஓட்டு எண்ணிக்கையைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் அனுரகுமார திசநாயக்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவர் இன்று இலங்கையின் ஒன்பதாவது அதிபராக பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அனுரகுமார திசநாயக்க, நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர். பள்ளியில் படிக்கும்போதே, ஜே.வி.பி. எனப்படும் ஜனதா விமுக்தி பேரமுனா கட்சியில் இணைந்து பணியாற்றினார். கல்லூரியிலும் இது தொடர்ந்தது. படிப்படியாக கட்சியில் அவர் முன்னேறி வந்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com