துரத்தும் டி20 சாபம்! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சொந்தமண்ணில் சோகம்!

தென்னாப்பிரிக்க வீரர்கள்
தென்னாப்பிரிக்க வீரர்கள்
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்கியது.

ஆன்டிகுவா மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்பின் களமிறங்கிய இந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை சேர்த்தது.

இதன்பின் 136 ரன்கள் என்ற எளிமையான இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் களமிறங்கினர். 2 ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அப்போது, தென்னாப்பிரிக்கா அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்திருந்தது.

கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பெய்த மழையால், ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்பட்டன. இதன்பின் டிஎல்எஸ் விதிமுறைப்படி தென்னாப்பிரிக்கா அணிக்கு 17 ஓவர்களில் 123 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

பின்னர் ஆடத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 5 ஓவர்கள் முடிவில் அணி 41 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து அல்ஜாரி ஜோசப், கிளாசன் அதிரடியாக விளையாடினாலும், நிலைத்து நின்று ஆடவில்லை.

இறுதியில், தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 18 பந்துகளில் 18 ரன்கள் தேவை என்ற நிலை உருவாகியது.

தொடர்ந்து யான்சன் - மஹாராஜ் இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். ராஸ்டன் சேஸ் வீசிய 16வது ஓவரில் மஹாராஜ் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டது. மெகாய் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து யான்சன் வெற்றிபெற வைத்தார்.

இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோல் சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி, தங்கள் கிரிக்கெட்டை வலுப்படுத்த இந்த போட்டியை பலமாக நம்பி இருந்தது. ஆனால் இதுவரை சொந்தமண்ணில் ட்20 உலகக் கோப்பையை எந்த அணியும் வென்றது இல்லை. இந்த சோகம் இந்த கோப்பையிலும் தொடர்கிறது!

logo
Andhimazhai
www.andhimazhai.com