டி20: முதல்முறையாக தென்னாப்பிரிக்கா சாதனை!

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்
தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல்முறையாக தென்னாப்பிரிக்கா அணி முன்னேறி சாதனை படைத்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் இன்று காலை தென்னாப்பிரிக்கா அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக தென்னாப்பிரிக்காவின் ஜான்சென், ஷம்ஷி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அனைவரும் 10 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. ஹெண்ட்ரிக்ஸ் 29, மார்க்ரம் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன் மூலம் ஐ.சி.சி. தொடர்களில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த ஆப்கானிஸ்தான் அணியின் கனவு தகர்ந்தது.

இன்று இரவு நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. இதில், வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com