பாராலிம்பிக்ஸ்: வெள்ளிப்பதக்கம் வென்ற யோகேஷ் கத்துனியா!

Yogesh Kathuniya
யோகேஷ் கத்துனியா
Published on

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் வட்டு எறிதல் எப் -56 இறுதிப்போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-ஆவது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்களுக்கான வட்டு எறிதல் எப்-56 இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் யோகேஷ் கத்துனியா கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட யோகேஷ் கத்துனியா 42.22 மீ தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். பிரேசிலின் கிளாடினி பாடிஸ்டா டோஸ் சாண்டோஸ் 46.86 மீ தூரம் எறிந்து தங்கப்பதக்கமும், கிரீஸின் கான்ஸ்டான்டினோஸ் சூனிஸ் 41.32 மீ தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

இந்த பதக்கத்தின் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 1 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது.

யோகேஷ் கத்துனியா யார்?

1997ஆம் ஆண்டு பகதூர்கரில் பிறந்த யோகேஷ் கத்துனியா, 9 வயதில் அரியவகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால், இரண்டு வருடம் சக்கர நாற்காலியிலேயே இருக்க வேண்டியதானது. அவரின் தாயார் மீனா தேவியின் முயற்சியால் பிஸியோதரபி சிகிச்சை பெற்ற கத்துனியா மூன்று வருடத்துக்குப் பிறகு மீண்டும் நடக்க தொடங்கினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com