பாராலிம்பிக்ஸ்: உருளை தடி எறிதலில் முதல் முறையாக தங்கம் வென்ற தரம்பிர்!

 Dharambir
தரம்பிர்
Published on

பாராலிம்பிக் உருளை தடி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என சாதனை படைத்துள்ளார் தரம்பிர்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் ஆடவருக்கான உருளைத் தடி (கிளப் த்ரோ) எப் 51 பிரிவில் இந்திய வீரர் தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். முதல் 4 முயற்சிகளையும் பவுல் செய்த தரம்பிர் 5ஆவது முயற்சியில் முதலிடம் பிடித்து அசத்தினார். மற்றொரு இந்திய வீரரான பிரணப் சூர்மா 34.59 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

தரம்பிர் அரியானா மாநிலம் சோனி பேட்டையைச் சேர்ந்தவர். தனது கிராமத்தில் உள்ள கால்வாயில் குதித்தபோது ஆழம் குறைவாக இருந்ததால், அடியிலிருந்த பாறை மீது மோதி காயம் அடைந்தார். இதில் இடுப்புக்குக் கீழ் ஊனமானார். 2014ஆம் ஆண்டு முதல் பாரா விளையாட்டில் கவனம் செலுத்தி வரும் தரம்பிர் 2016ஆம் ஆண்டு முதல் பாராலிம்பிக்ஸ் போட்டியில் விளையாடி வருகிறார்.

வெள்ளிப்பதக்கம் வென்ற 29 வயதான பிரணவும் அரியானாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் சீனா 160 பதங்களுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 81 பதக்கத்துடன் இரண்டாவது இடத்திலும் அமெரிக்கா 72 பதக்கத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதில் இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் பதக்கங்களுடன் 15ஆவது இடத்தில் உள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com