பாராலிம்பிக் போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் முடிவடைந்த நிலையில், இந்தியா 29 பதக்கங்களைப் பெற்று 18ஆவது இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17ஆவது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வந்தன. நேற்றுடன் பாராலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா சார்பில் மொத்தம் 29 பதக்கங்கள் வெல்லப்பட்டன. இந்திய வீரர்கள் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களைக் கைப்பற்றினர். இதையடுத்து பட்டியலில் இந்தியா 18ஆவது இடத்தை பிடித்தது.
தங்கப்பதக்கம்
அவனி லெகாரா- மகளிர் 10மீ ஏர் ரைபிள் ஸ்டேண்டிங் எஸ்எச்1 (துப்பாக்கி சுடுதல்)
நிதேஷ் குமார் - ஆடவர் ஒற்றையர் SL3 (பேட்மிண்டன்)
ஹர்விந்தர் சிங் - ஆடவர் தனிநபர் ரீகர்வ் (வில்வித்தை)
சுமித் ஆன்டில் - ஆடவர் ஈட்டி எறிதல் F64 (தடகளம்)
தரம்பிர் - ஆடவர் கிளப் த்ரோ 51 (தடகளம்)
பிரவீன் குமார் - ஆடவர் டி64 உயரம் தாண்டுதல் (தடகளம்)
நவ்தீப் சிங்- ஆடவர் ஈட்டி எறிதல் எப்4 (தடகளம்)
வெள்ளிப் பதக்கம்
மணீஷ் நர்வால் - ஆடவர் 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச் (துப்பாக்கி சுடுதல்)
துளசிமதி முருகேசன் - பெண்கள் ஒற்றையர் SUS (பேட்மிண்டன்)
சுஹாஸ் யாதிராஜ் - ஆடவர் ஒற்றையர் SL4 (பேட்மிண்டன்)
நிஷாத் குமார் - ஆடவர் உயரம் தாண்டுதல் டி47 (தடகளம்)
யோகேஷ் கதுனியா - ஆடவர் வட்டு எறிதல் F56 (தடகளம்)
அஜீத் சிங் - ஆடவர் ஈட்டி எறிதல் எப்46 (தடகளம்)
ஷரத் குமார் - ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 (தடகளம்)
சச்சின் கிலாரி - ஆடவர் ஷாட் புட் F46 (தடகளம்)
பிரணவ் சூர்மா - ஆடவர் கிளப்பில் 51 (தடகளம்)
வெண்கலப்பதக்கம்
மோனா அகர்வால் - மகளிர் 10மீ ஏர் ரைபிள் ஸ்டேண்டிங் SH1 (துப்பாக்கி சுடுதல்)
ரூபினா பிரான்சிஸ் - மகளிர் 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 (துப்பாக்கி சுடுதல்)
மனிஷா ராமதாஸ் - மகளிர் ஒற்றையர் SUS (பேட்மிண்டன்).
நித்யா ஸ்ரீ சிவன் - மகளிர் ஒற்றையர் SH6 (பேட்மிண்டன்)
ராகேஷ் குமார் / ஷீத்தல் தேவி கலப்பு அணி வளாகத்தில் திறந்த (வில்வித்தை)
கபில் பர்மர் - ஜூடோ ஆடவர் 60 கிலோ (ஜூடோ)
ப்ரீத்தி பால் மகளிர் 100மீ டி35 (தடகளம்)
ப்ரீத்தி பால் மகளிர் 200மீ டி35 (தடகளம்)
தீப்தி ஜீவன்ஜி மகளிர் 400 மீட்டர் டி20 (தடகளம்)
சுந்தர் சிங் குர்ஜார் ஆடவர் ஈட்டி எறிதல் எப்46 (தடகளம்)
மாரியப்பன் தங்கவேலு ஆடவர் உயரம் தாண்டுதல் டிவ (தடகளம்)
ஹோகாடோ செம ஆடவர் ஷாட் புட் கெப்7 (தடகளம்)
சிம்ரன் சிங் - மகளிர் 200 மீட்டர் டி12 (தடகளம்)